அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19-க்கும் பின்பான நாட்டின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பு, உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடக்கம்
Posted On:
14 OCT 2021 9:19AM by PIB Chennai
தொற்று நோய்களை எதிர்கொள்வதில் ஒரே மாதிரியான சுகாதார முயற்சிகளின் முக்கியத்துவத்தை கொவிட்-19 பெருந்தொற்று வலியுறுத்தியது. இந்த அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, கொவிட்-19-க்கும் பின்பான நாட்டின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் முக்கிய பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர தொற்றுகளை கண்காணித்து, அவற்றின் போக்கை புரிந்து கொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.
காணொலி மூலம் ஒன் ஹெல்த்தை துவக்கி வைத்து பேசிய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப், ஹைதரபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை-விலங்குகள் உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் தலைமையிலான இந்த கூட்டமைப்பில் 27 அமைப்புகள் இடம் பெற்றிருப்பதாகவும், கொவிட்டுக்கு பிறகு இந்திய அரசால் தொடங்கப்படும் மிகப்பெரிய சுகாதார திட்டங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறினார்.
எய்ம்ஸ் தில்லி, எய்ம்ஸ் ஜோத்பூர், ஐவிஆர்ஐ பரேலி, கத்வாசு லூதியானா, டானுவாஸ் சென்னை, எம்எஃப்எஸ்யு நாக்பூர், அசாம் வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு ஐசிஏஆர், ஐசிஎம்ஆர் மையங்கள் மற்றும் காட்டுயிர் நிறுவனங்கள் ஒன் ஹெல்த் கூட்டமைப்பில் உள்ளன.
எதிர்கால தொற்றுநோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மனித, விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ள ஒரு முழுமையான அணுகுமுறையின் அவசியத்தை நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஸ்வரூப் வலியுறுத்தினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763772
*****
(Release ID: 1763931)
Visitor Counter : 469