பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

177 பழங்குடி தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீட்டைப் பெற டிரைஃபெட் முயற்சி செய்கிறது

प्रविष्टि तिथि: 13 OCT 2021 3:48PM by PIB Chennai

தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்கள் சிலவற்றை தயாரித்து வரும் இந்திய பழங்குடியினரின் பாரம்பரிய நிபுணத்துவத்தை பாதுகாப்பதையும், அதற்கு புத்தாக்கம் அளிப்பதையும் டிரைஃபெட்டின் புவிசார் குறியீடு முன்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.

பழங்குடியினர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று அவற்றை சந்தைப்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட புவியியல் தன்மையுடன் கூடிய விவசாய, இயற்கை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பாதுகாத்து ஒப்பற்ற இந்தியாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களை காப்பதில் டிரைஃபெட் பங்காற்றுகிறது.

உலகளாவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினர் குழுக்கள் உருவாக்கி வரும் பொருட்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்திய தூதரகங்களில் டிரைஃபெட்டுடன் இணைந்து தற்சார்பு இந்தியாமுனைகள் உருவாக்கப்படுகின்றன.

புவிசார் குறியீடு பெற்ற 56 பொருட்களை சந்தைப்படுத்துவதோடு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 177 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற டிரைஃபெட் முயற்சி எடுத்து வருகிறது.

அவற்றின் விவரம் வருமாறு: வடகிழக்கு (88), உத்தரகாண்ட் (14) , ஜார்க்கண்ட் (11), மத்தியப் பிரதேசம் (11), மகாராஷ்டிரா (10) ஒடிசா (6), மேற்கு வங்கம் (9), குஜராத் (7), சத்தீஸ்கர் (7), ஆந்திரப் பிரதேசம் (4), ராஜஸ்தான் (4), தெற்கு (3) மற்றும் வடக்கு (3).

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763602

-----


(रिलीज़ आईडी: 1763679) आगंतुक पटल : 320
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi