சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று தர ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தூசு கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்புகள் தேசிய தலைநகர் பகுதியில் அமைப்பு
Posted On:
05 OCT 2021 6:30PM by PIB Chennai
தேசிய தலைநகர் பகுதி முழுவதும் பரவியுள்ள சாலைகள் மற்றும் திறந்தவெளியில் இருந்து வெளியேறும் தூசி மாசுபாட்டை திறம்பட சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் காற்று தர மேலாண்மை ஆணையம் எடுத்து வருகிறது.
தூசி மாசு ஆதாரங்களைக் கட்டுப்படுத்த புதுமையான தீர்வுகளுடன் தூசி தணிப்பு நடவடிக்கைகளை மூலோபாய ரீதியாக வலுப்படுத்துவதே இதன் அணுகுமுறை ஆகும். இதற்காக, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தில்லி மாநில அரசுகளின் அனைத்து சாலை உடைமை/ பராமரிப்பு/ சாலை கட்டுமான நிறுவனங்களுக்கு தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் காற்று தர மேலாண்மை ஆணையம் மூலம் அந்தந்த மாநிலங்களில் தூசி கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்புகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சாலை தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் இணக்கத்தை இந்த பிரிவுகள் தொடர்ந்து கண்காணிப்பதோடு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும். இது தவிர, மாதாந்திர அடிப்படையில் இந்த பிரிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் முழுமையான அறிக்கைகள் தூசி மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உதவும்.
இது தொடர்பாக 10-அம்ச தூசி கண்காணிப்பு அளவுருவை தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் காற்று தர மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ளது. தூசி கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்புகளால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761162
-----
(Release ID: 1761236)
Visitor Counter : 245