சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாம் இயற்கையின் பாதுகாவலர்களே தவிர முதலாளிகள் அல்ல: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
प्रविष्टि तिथि:
02 OCT 2021 3:45PM by PIB Chennai
காந்தி ஜெயந்தி மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்சவ வாரத்தை (4-10 அக்டோபர் 2021) குறிக்கும் விதமாக, ‘புலிகளுக்காக இந்தியா’ என்ற பேரணியை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சிந்து மற்றும் கங்கை நதிகளில் டால்பின்களை கணக்கெடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாம் இயற்கையின் பாதுகாவலர்களே தவிர முதலாளிகள் அல்ல என்று கூறினார். நாடு தழுவிய ‘புலிகளுக்காக இந்தியா’ பேரணி தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகள் மற்றும் வழிகளில் கள இயக்குநர்களால் முன்னெடுக்கப்படும்.
ரந்தம்போர், கன்ஹா, மெல்காட், பந்திப்பூர், சிமிலிபால், சுந்தர்பன்ஸ், மானஸ், பலமாவ் மற்றும் கார்பெட் புலிகள் காப்பகங்களில் பேரணிகள் நிறைவடையும். 1973-ம் ஆண்டு புலி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நம் நாட்டின் முதல் ஒன்பது புலிகள் காப்பகங்களை இது குறிக்கிறது.
அனைத்து 51 புலிகள் காப்பகங்களும் பேரணியில் பங்கேற்கின்றன. நமது கலாச்சாரம், புராணம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய புலியின் இருப்பை வெளிப்படுத்தும் வகையில் பேரணி முழுவதும் எண்ணற்ற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ‘காடு மற்றும் வனவிலங்கு பகுதிகளில் நிலையான சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கான வழிகாட்டுதல்களை’ வெளியிட்டுள்ளது. வனம், வனவிலங்கு பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா தளங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760326
*****************
(रिलीज़ आईडी: 1760384)
आगंतुक पटल : 268