பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனத்தின் நிதி தகவல் அளித்தல் தர ஆய்வறிக்கை வெளியீடு

Posted On: 28 SEP 2021 10:59AM by PIB Chennai

2019-20 நிதி ஆண்டுக்கான குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனத்தின் நிதி தகவல் அளித்தல் குறித்த தர ஆய்வறிக்கையை  தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.

நிதி தகவல் அளித்தல் தர ஆய்வறிக்கை என்பது தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையகத்தின் கண்காணிப்பு திட்டத்தின் இரண்டு அம்சங்களுள் ஒன்றாகும். மற்றொரு அம்சம், தணிக்கை தர ஆய்வு அறிக்கையாகும்.

பொருந்தக்கூடிய கணக்கியல் தரநிலைகளுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளை தயாரிப்பதற்கு பொறுப்பானவர்களின் பங்களிப்பில் நிதி தகவல் அளித்தல் தர ஆய்வறிக்கை கவனம் செலுத்துகிறது.

நிறுவனச் சட்டம், 2013 இன் பிரிவு 131 மற்றும் இந்திய கணக்கியல் தரநிலை ஏஎஸ் 8 ஆகியவற்றின் படி மீண்டும் எடுத்துரைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை தயாரித்து வெளியிட வேண்டுமா என்று குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனம் ஆய்வு செய்ய தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையகம் பரிந்துரைத்துள்ளது.

நிதி தகவல் அளித்தல் தர ஆய்வறிக்கையை தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையகத்தின் இணையதளத்தில் (https://nfra.gov.in/sites/default/files/FRQR%20Report%20KIOCL_1.pdf)  காணலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758789



(Release ID: 1758870) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Hindi