பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

திடக்கழிவை, பயோ எரிவாயுவாக மாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஐஜிஎல் மற்றும் தெற்கு தில்லி நகராட்சி கையெழுத்து

Posted On: 27 SEP 2021 4:45PM by PIB Chennai

மாநகராட்சி திடக் கழிவுகளை, வாகனங்களுக்கு பயோ எரிவாயுவாக மாற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்திரபிரஸ்தா கேஸ் நிறுவனம்(ஐஜிஎல்) மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி ஆகியவை இன்று கையெழுத்திட்டன.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜால், ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, ‘‘திட கழிவு, நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் 14 சதவீத திடக் கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டன. தூய்மை இந்தியா திட்டத்தால், இந்த அளவு 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம், இத்திட்டத்தை விரைவாக அமல்படுத்த உதவும். இன்னும் பல திட்டங்களுக்கு இது அடிப்படையாக மாறியுள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் வெற்றிகரமான திட்டம். இத்திட்டம் தவறாமல் பரிசீலிக்கப்படும். இதை அமல்படுத்துவதற்கான தடைகள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

*****************



(Release ID: 1758667) Visitor Counter : 256


Read this release in: English , Urdu , Hindi