அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி வானிலைக் கணிப்புகளில் சூரிய ஒளி வட்டத்தின் வெளியேற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆய்வு.

Posted On: 21 SEP 2021 4:11PM by PIB Chennai

சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலம் போன்ற சூரிய வளிமண்டல நிகழ்வுகள் மற்றும் நிலைகளால், நமது செயற்கைக்கோள்களின் ஆரோக்கியத்தில் முக்கியமாகத் திகழும் விண்வெளி வானிலையின் துல்லியமான கணிப்பில் எவ்வாறு தாக்கம் ஏற்படுகிறது என்பதை அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று விளக்குகிறது. இந்தப் புரிதல், முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பணிகளில் உதவியாக இருக்கும்.

விண்வெளி வானிலை என்பது சூரியக்காற்று மற்றும் பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியின் நிலையைக் குறிக்கும். பல்வேறு தொழில்நுட்ப அமைப்பு முறைகளின் செயல்திறனில் இந்த வானிலை நிலவரம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். நமது செயற்கைக்கோள்களைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், சூரிய வளி மண்டலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் எவ்வாறு விண்வெளி வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். வாகீஷ் மிஸ்ரா தலைமையிலான வானியலாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, ராயல் அஸ்ட்ரானமி ஜர்னல் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு டாக்டர். வாகீஷ் மிஸ்ராவைத் (wageesh.mishra[at]iiap.res.in) தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756714

 



(Release ID: 1756834) Visitor Counter : 192


Read this release in: English , Urdu , Hindi