அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுப்புறச் சூழலுக்கு ஒற்றை பொருள் எஞ்சினின் எதிர்வினை குறித்த ஆய்வு உயிரிமருத்துவ பொறியியலில் குறு-இயந்திரங்களை கட்டமைக்க உதவும்

Posted On: 20 SEP 2021 5:16PM by PIB Chennai

சுற்றுப்புறங்களின் ஓசைக்கேற்ப ஒற்றை கூட்டு பொருட்களைக் கொண்ட மிகச்சிறிய எஞ்சின்களின் செயல்திறன் மாறும் என்று சுற்றுப்புறச் சூழலின் ஓசை மாறுபாடுகளுக்கு ஏற்ப மாறும் குறு-எஞ்சின்களின் எதிர்வினையை ஆய்வு செய்த ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது.

உயிரிமருத்துவ பொறியியலில் முக்கியத்துவம் பெற்று வரும் சிக்கலான உயிரியல் சூழல்களில் செயலாற்றும் குறு-இயந்திரங்களை வரும் காலங்களில் வடிவமைப்பதில் இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான முன்னேறிய அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையத்தை மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு இதை கண்டறிந்துள்ளது.

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றும் குறு இயந்திரங்கள், விமானவியல் முதல் உயிரிமருத்துவ பொறியியல் வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு குறித்த அறிக்கையை   https://doi.org/10.1038/s41467-021-25230-1 எனும் இணைப்பில் காணலாம்.

எழுதியவர்கள்: நிலோயெந்து ராய், நாதன் லெராக்ஸ், ஏ கே சூத் மற்றும் ராஜேஷ் கணபதி

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756436

*****************



(Release ID: 1756485) Visitor Counter : 170


Read this release in: Hindi