மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
சத்தீஸ்கர் மீனவர்களுக்கு, ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தொலைதூர மருத்துவ வசதிக்கு ஏற்பாடு
Posted On:
20 SEP 2021 5:24PM by PIB Chennai
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மீனவ கூட்டுறவு உறுப்பினர்களுக்கு, ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் தொலைதூர மருத்துவ சேவை திட்டத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இன்று தொடங்கி வைத்தார்.
தேசிய கூட்டுறவு வளர்ச்சி கார்பரேஷன் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்தீஸ்கர் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், தங்களின் மருத்துவ தேவைகளுக்கு, ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆலோசிக்க முடியும்.
இந்த தொலைதூர மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்ய ரூ.50 லட்சத்துக்கான காசோலையை ராய்ப்பூர் எய்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நிதின் எம். நகர்கரிடம், மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வழங்கினார்.
‘‘இந்த தொலைதூர மருத்துவ வசதி சத்தீஸ்கர் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் மருத்துவ தேவையை உறுதி செய்யும்,
தொலை தூர இடங்களில் இருந்தாலும், தொலைதூர மருத்துவ வசதி மூலமாக, மருத்துவ தேவைகளுக்கு அவர்கள் ராய்ப்பூர் எய்ம்ஸ் நிபுணர்களை அணுக முடியும்’’ என மத்திய அமைச்சர் கூறினார்.
மருத்துவமனைகள் நகரப் பகுதிகளில் கவனம் செலுத்துவதால், தொலைதூர கிராமங்களுக்கு அந்த வசதிகள் கிடைக்கவில்லை. அதனால் தொலைதூர மருத்துவ சேவைகளுக்கு நாட்டில் பிரம்மாண்ட வாய்ப்பு உள்ளது என மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
*****************
(Release ID: 1756477)
Visitor Counter : 211