பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தனது சாலைகளின் பாதுகாப்பு குறித்த தணிக்கையை எல்லையோர சாலைகள் அமைப்பு மேற்கொள்ளவிருக்கிறது

Posted On: 18 SEP 2021 6:28PM by PIB Chennai

எல்லையோர சாலைகள் அமைப்பால் கட்டமைக்கப்படும் சாலைகள் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் மட்டுமில்லாது நாடு முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் சாகச விரும்பிகளாலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து பருவநிலைகளையும் தாங்கி போக்குவரத்தை கையாளும் வண்ணம் சாலைகளை கட்டமைப்பதற்காக நவீன கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் சாலைகள் துரிதமாக கட்டமைக்கப்படுகின்றன.

தனது சாலைகள் மற்றும் பாலங்களில் விபத்துகளுக்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ள எல்லையோர சாலைகள் அமைப்பு, தனது சாலைகள் மற்றும் பாலங்களில் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

கொள்கைகளை வகுத்து அவற்றை செயல்படுத்தவும் எல்லையோர சாலைகள் அமைப்பின் அனைத்து திட்டங்களிலும் பாதுகாப்பு குறித்து நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை உருவாக்கவும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான உயர்சிறப்பு மையம் புதுதில்லியில் உள்ள எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்த குறும்பாடல்கள் மற்றும் சிறு ஆவணப்படங்களை எல்லையோர சாலைகள் அமைப்பு ஏற்கனவே தயாரித்து பதிவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் 75 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் 2021 அக்டோபர் 14 அன்று தொடங்கவுள்ளது.

மாதம் முழுவதும் நடைபெறவுள்ள தணிக்கை, ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள எல்லையோர சாலைகள் அமைப்பின் அனைத்து திட்டங்களிலும் 2021 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756089

*****************


(Release ID: 1756124) Visitor Counter : 310


Read this release in: English , Urdu , Hindi , Marathi