வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதுப்பிக்கப்பட்ட தங்க பணமாக்கல் திட்டம், தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்தல் போன்றவை, நகைத் தொழில் அடுத்த நிலைக்கு வளர உதவும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்
प्रविष्टि तिथि:
15 SEP 2021 12:24PM by PIB Chennai
புதுப்பிக்கப்பட்ட தங்க பணமாக்கல் திட்டம், தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்தல் போன்றவை, நகைத் தொழில் அடுத்த நிலைக்கு வளர உதவும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் கூறியுள்ளார்.
மாணிக்க கற்கள் மற்றும் நகைத் தொழில் துறை இந்திய பொருளாதார துறைகளில் முக்கியமானவைகளில் ஒன்றாக உள்ளது. இதன் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் ஆகும். நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதியில், நகைகள் ஏற்றுமதியின் பங்கு 10 முதல் 12 சதவீதம் வரை உள்ளன. வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், நகைத் தொழில்துறை முன்னணி துறையாக உள்ளது. 5 மில்லியன் திறமை மிக்க தொழிலாளர்களுக்கு இது வேலைவாய்ப்பை அளிக்கிறது.
நகைத் தொழிலுக்கான மூலப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் இல்லாமலேயே வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியுள்ளார்.
பிரதமரின் தொலை நோக்கான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஆபரணக் கற்கள் மற்றும் நகைத் தொழில்துறை சிறந்த உதாரணமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், கடந்தாண்டு ஏப்ரலில் ஆபரணக் கற்கள் மற்றும் நகைத் துறை ஏற்றுமதி 98 சதவீத வீழ்ச்சி கண்டது.
ஆபரணக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஜிஜேஇபிசி), மத்திய அரசுடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் மூலம் நகைத் தொழில் துறையின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 15 சதவீத வளர்ச்சி கண்டது. 2021-22ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் மாணிக்க கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி 9.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு எட்டியுள்ளது.
கொள்கைகள் வரிசையில், புதுப்பிக்கப்பட்ட தங்க பணமாக்கல் திட்டம், தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்தல், ஹால்மார்க் முத்திரை போன்ற பல சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் நகைத்துறையை அடுத்த நிலைக்குக் வளர உதவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754993
*****
(Release ID: 1754993)
(रिलीज़ आईडी: 1755048)
आगंतुक पटल : 272