புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி மாற்றத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிறது: மத்திய மின்சார அமைச்சர்
Posted On:
08 SEP 2021 5:25PM by PIB Chennai
பாரிஸ் பருவநிலை மாற்ற (காப்21) உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதிலும் முன்னணியில் உள்ள சில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று கூறினார்.
மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீருக்கான குழு (சிஈஈடபுள்யூ) இணைந்து நடத்திய ‘உலகளாவிய ஹைட்ரஜன் பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான பல்முனை அணுகல்’ எனும் இணைய கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
எரிசக்தி துறையில் எட்டப்பட்டு வரும் வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது, இந்தியா தனது உறுதிமொழிகளை குறிப்பிட்ட காலத்தில் அடைவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தாண்டியும் சாதிக்கும் என்று அவர் கூறினார்.
100 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் எனும் மைல்கல்லை அடைவது பெருமையளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்ட அமைச்சர், சுத்திகரிப்பு, உரங்கள் மற்றும் எஃகு துறைகளில் பசுமை ஹைட்ரஜன் கொள்முதலுக்கான விதிமுறைகளை வகுக்க அரசு திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.
கனரக போக்குவரத்து துறையில் பசுமை ஹைட்ரஜனின் பயன்பாட்டிற்கான இடைவெளி நிதியுதவி திட்டத்தையும் அரசு திட்டமிட்டு வருகிறது.
எரிசக்தி மாற்றத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகளான சிலி, டென்மார்க், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை, தொழில்துறை எரிசக்தி மாற்றம் குறித்த ஆலோசனையில் கலந்து கொள்ள இந்தியா அழைப்பு விடுத்தது. இந்த நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் இன்றைய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753214
---
(Release ID: 1753340)
Visitor Counter : 225