ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ரயில்வேயின் புதிய 3 ஏசி எகானமி ரயில் பெட்டி: பிரயாக்ராஜ்-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவையை தொடங்கியது

Posted On: 06 SEP 2021 2:42PM by PIB Chennai

குறைந்த கட்டணத்தில் ஏ.சி ரயிலில் பயணிக்கும் வகையில், இந்திய ரயில்வே 3ஏசி எகானமி ரயில் பெட்டிகளை உருவாக்கியுள்ளது. இந்த புதிய ரயில் பெட்டியில், பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பெட்டி தனது சேவையை இன்று தொடங்கியது. ரயில் எண்.02403 பிரயாக்ராஜ்-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் முறையாக 3ஏசி எகானமி ரயில் பெட்டி இணைக்கப்பட்டது. 

இந்த பெட்டியில் 83 படுக்கைகள் இருக்கும். வழக்கமான 3 ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் இருக்கும்.  புதிய 3 ஏசி எகானமி ரயில் பெட்டியில் கட்டணம், 3 ஏசியை விட 8 சதவீதம் குறைவாக இருக்கும்.

ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டியின் சிறப்பம்சங்கள்:

* படுக்கை எண்ணிக்கை 72 லிருந்து 83 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* இருக்கைகள் மற்றும் படுக்கைகளின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளன.

* மடக்ககூடிய ஸ்நாக்ஸ் டேபிள்கள்.

* ஒவ்வொரு படுக்கைக்கும், தனித்தனி ஏ.சி துவாரங்கள்.

* மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகள் மற்றும் கழிவறையில் அகலமான கதவு.

* தனித்தனியான ரீடிங் விளக்கு மற்றும் யுஎஸ்பி சார்ஜ் வசதி.

* நடுவில் உள்ள மற்றும் மேலடுக்கு படுக்கைகளுக்கு இடையே உயரம் அதிகரிப்பு.

* பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க ஒலி பெருக்கிகள். 

* மேம்பட்ட தீயணைப்பு சாதனம்.

* சிசிடிவி கேமிரா.

* புதிய வடிவில் ஏணி.

*****************


(Release ID: 1752572) Visitor Counter : 342