சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பாஸ்போர்ட் குறை தீர்ப்பு: மெய்நிகர் உரையாடல்

Posted On: 06 SEP 2021 4:56PM by PIB Chennai

பாஸ்போர்ட் தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்காக, இம்மாதம் 7-ந் தேதி முதல், செவ்வாய்க்கிழமை தோறும் நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பிற உயரதிகாரிகளுடன், மெய்நிகர் முறையில் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் உரையாடி தமது குறைகளை தெரிவிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் வாட்ஸ்-அப் எண்.+917305330666-ஐ, இதற்காகப் பயன்படுத்தலாம்.

டெலி கான்பரன்ஸ், மின்னஞ்சல், ஸ்கைப் வாயிலாக மெய்நிகர் விசாரணை, டுவிட்டர் ஆகிய வழிமுறைகளில் பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பதாரரின் குறைகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் பெற்று, அவற்றை தீர்த்து வருகிறது. தற்போது வாஸ்ட்-அப் வீடியோ அழைப்பு வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவல், சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

******



(Release ID: 1752566) Visitor Counter : 140


Read this release in: English