அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரியசக்தி உற்பத்தியின் மீது தூசுப்படலம் மற்றும் மேகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு நிதி நஷ்டத்திற்கு வழிவகுக்கிறது
Posted On:
03 SEP 2021 4:20PM by PIB Chennai
ஒளிமின்னழுத்தம் மற்றும் மேற்கூரை சூரியசக்தி உற்பத்தியின் மீது தூசுப்படலம் மற்றும் மேகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் காரணமாக குறிப்பிடத்தகுந்த பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்று இந்திய மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
தூசுப்படலம் மூலம் சூரியசக்தி உற்பத்தியில் வருடத்திற்கு ரூ 1.55 மில்லியன் வரை நஷ்டம் ஏற்படுகிறதென்றும், தூசு மற்றும் மேகங்கள் மூலம் சூரியசக்தி உற்பத்தியில் வருடத்திற்கு ரூ 0.56 மற்றும் 2.47 மில்லியன் வரை நஷ்டம் ஏற்படுகிறதென்றும் அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்திய சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் மின்சார முகமைகள் திறன்மிகு செயல்பாடுகளை மேற்கொண்டு நஷ்டத்தை குறைக்க முடியும்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நைனிட்டாலில் உள்ள கூர்நோக்கு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் தேசிய கூர்நோக்கு ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சூரியசக்தி உற்பத்தியின் மீது தூசுப்படலம் மற்றும் மேகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஆராய்ந்து இதை கண்டறிந்துள்ளனர்.
கூர்நோக்கு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் உமேஷ் சந்திர தும்பா தலைமையிலான இந்த ஆராய்ச்சிக்கு கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் தேசிய கூர்நோக்கு ஆய்வக விஞ்ஞானி பேராசிரியர் பனகியோடிஸ் ஜி கோஸ்மோபௌலஸ், பெங்களூரு ஐஐஏ-வின் விஞ்ஞானி டாக்டர் சாந்திகுமார் எஸ் நிங்கோம்பம் மற்றும் ஐஐடி ரூர்கியின் ஆசிரியர் அக்ரிதி மசூம் ஆகியோர் பங்களித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751722
*****************
(Release ID: 1751822)
Visitor Counter : 250