புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாநிலங்களின் சங்கம் ஏழாவது நிறுவன தினத்தை கொண்டாடியது

Posted On: 28 AUG 2021 12:20PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாநிலங்களின் சங்கம் (ஏரியாஸ்) ஏழாவது நிறுவன தினத்தை நேற்று கொண்டாடியது. இந்நிகழ்வின் போது, ஏரியாஸ் மற்றும் தேசிய சூரிய சக்தி நிறுவனம், தேசிய காற்றாலை மின்சார நிறுவனம் மற்றும் சர்தார் ஸ்வரன் சிங் தேசிய உயிரி எரிசக்தி நிறுவனம் ஆகிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மூன்று நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரும், ஏரியாஸின் அலுவல் சாரா தலைவருமான திரு இந்து சேகர் சதுர்வேதியின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கு மேலும் ஒத்துழைப்பும், ஊக்கமும் கிடைக்கும்.

நிகழ்ச்சியின் போது ஏரியாஸ் தொலைபேசி தகவல் கையேடு 2021-ஐ புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரும், ஏரியாஸின் அலுவல் சாரா தலைவருமான திரு இந்து சேகர் சதுர்வேதி வெளியிட்டார்.

 

மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும், ஏரியாஸின் அலுவல் சாரா புரவலருமான திரு ஆர் கே சிங் வெளியிட்டுள்ள செய்தியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கமளிப்பதில் மாநில முகமைகள் முக்கிய பங்காற்றுவதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் எனும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய நாம் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

ஏரியாஸின் ஏழாவது நிறுவன தினத்தை ஒட்டி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ரசாயனம் மற்றும் உரம் இணை அமைச்சர் திரு பக்வந்த் கூபா வெளியிட்டுள்ள செய்தியில், 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் எனும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதில் மாநில முகமைகளின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749837

*****************


(Release ID: 1749957) Visitor Counter : 296


Read this release in: English , Urdu , Hindi