குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நம்பிக்கை மற்றும் நன்நம்பிக்கையை அளிக்கிறது: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 27 AUG 2021 6:08PM by PIB Chennai

 ‘‘சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கிநாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக தப்பிச் செல்ல வைக்கின்றன’’ என அவர் கூறினார்.

டைம்ஸ் இலக்கிய திருவிழாநிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசியதாவது:

நெருக்கடியான நேரத்தில், இலக்கியம்தான் பொருத்தமான கேள்விகளை எழுப்பி, பொருத்தமான பதில்களை அளிக்கும். படைப்பாளிகளாக, ஒழுக்கவாதிகளாக, வழிக்காட்டிகளாக மற்றும் தத்துவவாதிகளாக -   இலக்கியவாதிகள், தங்கள் படைப்புகள் மூலம், நமது கற்பனையை பல வழிகளில் ஈர்க்கின்றனர்.

வேறு எதுவும் செல்ல முடியாத வகையில், சிறந்த எழுத்துக்கள் நம்மை பல வழிகளில் சென்றடைகின்றன.  காலம் மற்றும் இடத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டிய அனுபவத்தில், நாம் வார்த்தைகளின் உலகில் நம்மை இழக்கிறோம். சிறந்த படைப்பில் ஒருவர்  மூழ்குவதற்கு பொருத்தமான நேரம் என்று எதுவும் இல்லை.

பழங்காலத்திலிருந்தே, அறிவு மற்றும் ஞானத்தின் களஞ்சியமாக இந்தியா இருந்திருக்கிறது. இது கலாச்சாரத்தின் புகழ்பெற்ற தொட்டில். இது வேதங்கள், உபநிடதங்கள் உட்பட தத்துவத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் மற்றும் பகவத் கீதை, என்றும் அழியாத இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம், பஞ்சதந்திர கதைகள், அறிவுரை கதைகள், காளிதாசரின் நாடகங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளது.   

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749622

*****************


(Release ID: 1749695) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Hindi , Punjabi