சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 59.86 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
27 AUG 2021 2:26PM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் வேகத்தையும் வீச்சையும் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 2021 ஜூன் 21 அன்று தொடங்கியது.
அதிக தடுப்பூசி டோஸ்களை கிடைக்க செய்து, அவற்றின் எண்ணிக்கை குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி, தடுப்பூசி விநியோக சங்கிலி தொடர்ந்து முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு இதுவரை, 59.86 கோடிக்கும் அதிகமான (59,86,36,380) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 17,64,000 கொவிட் தடுப்பூசி டோஸ்களை கூடுதலாக வழங்கவுள்ளது.
4.05 கோடிக்கும் அதிகமான (4,05,05,746) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் தற்சமயம் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749524
*****************
(रिलीज़ आईडी: 1749602)
आगंतुक पटल : 189