எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எஸ்டிசி நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் அலுவலகம்: மத்திய எஃகுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 26 AUG 2021 4:47PM by PIB Chennai

எம்எஸ்டிசி நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை கொல்கத்தாவின் நியூடவுன் நகரில், மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். அதோடு தரவு மையம் மற்றும் கைப்பேசி செயலியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். எஃகு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஃபுகன் சிங் குலாஸ்தேவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், ‘‘ மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்பரேஷன் லிமிடெட் என தொடங்கிய எம்எஸ்டிசி நிறுவனம் தற்போது மின்னணு வர்த்தகத்தில் முதன்மையான நிறுவனமாக மாறியுள்ளது. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளின் மின்னணு ஏலங்களுக்கு சிறப்பான தீர்வுகளை வழங்குகிறதுசுற்றுச்சூழலுக்கு ஏற்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது மற்றும் மாசற்ற எஃகு தயாரிக்கும் திட்டத்தை நோக்கி அரசு செயல்படுகிறது.

உடைந்த இரும்பு துண்டுகளை ஏற்றுமதி செய்யும் ஒழுங்குமுறை அமைப்பாக இருந்த எம்எஸ்டிசி நிறுவனம், அதன்பின் உடைந்த இரும்பு துண்டுகளையும், உடைப்பதற்கு பழைய கப்பல்களை இறக்குமதி செய்யும் அமைப்பாக மாறியுள்ளது. பாரம்பரிய தொழிலில் இருந்து, மின்னணு-வர்த்தகம் உட்பட பல தொழில்களில் ஈடுபடும் நிறுவனமாக எம்எஸ்டிசி நிறுவனம் மாறியுள்ளது. இன்று, எம்எஸ்டிசி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 17 அலுவலகங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749258

----


(Release ID: 1749408) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Hindi