பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
2021 ஜூலை மாதத்திற்கான உற்பத்தி அறிக்கை
Posted On:
24 AUG 2021 10:18AM by PIB Chennai
கச்சா எண்ணெய்:
2021 ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2548.78 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) எனும் அளவாக இருந்தது. மாத இலக்கைவிட இது 3.78 சதவீதம் குறைவு, 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.22 சதவீதம் குறைவாகும்.
2021 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மொத்தக் கச்சா எண்ணெய் உற்பத்தி 9961.65 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 2.64 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டை விட 3.37 சதவீதம் குறைவு.
இயற்கை எரிவாயு:
2021 ஜூலை மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2891.96 எம் எம் எஸ் சி எம் (Million Metric Standard Cubic Meters) அளவாக இருந்தது. இது 2020 ஜூலை மாதத்தை விட 18.36 சதவீதம் அதிகம், ஆனால் மாதந்திர இலக்கைவிட 10.19 சதவீதம் குறைவு.
2021 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 11060.07 எம் எம் எஸ் சி எம் ஆக இருந்தது. இது இந்த கால அளவிற்கான இலக்கைவிட 5.37 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டின் இதே கால அளவில் நடைபெற்ற உற்பத்தியைக் காட்டிலும் 19.85 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.
பெட்ரோலியப் பொருள்களின் மாதாந்திர சுத்திகரிப்பு உற்பத்தி:
2021 ஜூலை மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் அளவு 19383.64 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 4.06 சதவீதம் குறைவு. 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.64 சதவீதம் அதிகமாகும்.
2021 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 76638.47 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 15.58 சதவீதம் அதிகம். ஆனால், இலக்கை விட 3.07 சதவீதம் குறைவாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748463
******
(Release ID: 1748518)
Visitor Counter : 192