ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டுப்புற மற்றும் பழங்குடி ஒவியங்களின் சர்வதேச கண்காட்சியை திரு உபேந்திர பிரசாத் சிங் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 18 AUG 2021 5:31PM by PIB Chennai

ரீட்டியோன் சே கலாகிரிதியோன்கா சஃபர்எனும் நாட்டுப்புற மற்றும் பழங்குடி ஒவியங்களின் சர்வதேச கண்காட்சியை தேசிய கைவினை அருங்காட்சியகம் மற்றும் ஹஸ்தகலா அகாடெமியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திரு உபேந்திர பிரசாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

கைவினை பொருட்கள் மேம்பாடு ஆணையர் அலுவலகம் மற்றும் ஒடி கலை மையம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியில் ஏழு நாடுகளில் இருந்து (இந்தியா-102, தென் கொரியா-8, மியான்மர்-2, இலங்கை-2, வங்கதேசம்-3 மற்றும் நேபாளம்-7) 125 நாட்டுப்புற மற்றும் பழங்குடி ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (ஆகஸ்ட் 18) முதல் செப்டம்பர் 3 வரை இந்த சிறப்பு கண்காட்சி நடைபெறும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு உபேந்திர பிரசாத் சிங், பல்வேறு கலைப் படைப்புகளை ஒரே இடத்தில் காண்பதற்கான வாய்ப்பை கலை ரசிகர்களுக்கு இத்தகைய கண்காட்சிகள் வழங்குவதோடு, கலைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்றார்.

மிகவும் பிரபலமான இந்திய கைவினை பொருட்களை ஊக்குவிக்க கைவினை பொருட்கள் மேம்பாடு ஆணையர் அலுவலகத்தை அரசு அமைத்துள்ளதாகவும், கலைகள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747091

----

 


(रिलीज़ आईडी: 1747179) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी