மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மற்றும் சமூகப் படிநிலையில் அடித்தளத்தில் இருப்பவர்களின் மேம்பாட்டிற்காக அரசு உறுதி பூண்டுள்ளது: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
இடுகை இடப்பட்ட நாள்:
17 AUG 2021 7:27PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு, 'விடுதலையின் அம்ரித் மகோத்சவ ஸ்ரீ சக்தி சவால் 2021'-ஐ மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.
மகளிரின் பாதுகாப்பு, அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பெண் தொழில்முனைவோர் உருவாக்கிய தொழில்நுட்பப் பதிவுகளை ஊக்கப்படுத்துவது இந்தச் சவாலின் நோக்கமாகும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்-நாஸ்காம் ஸ்டார்ட் அப் பெண் தொழில் முனைவோர் விருதுகளின் வெற்றியாளர்களும் இந்நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர்.
சவாலில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த திரு அஸ்வினி வைஷ்ணவ், "தங்களது பொருள்களை, சிந்தனைகள் என்ற கட்டத்திலிருந்து முழுமை பெற்ற பொருள்கள் என்ற கட்டத்திற்கு பெண் தொழில்முனைவோர் முன்னேற்றிச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் என்றுமே உங்கள் கூட்டாளியாக இருந்து வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாவதற்கான உங்கள் பயணத்தில் ஆதரவளிக்கும், என்று அவர் மேலும் கூறினார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கடந்த ஏழு வருடங்களாக புதிய சாதனைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு படைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மற்றும் சமூகப் படிநிலையில் அடித்தளத்தில் இருப்பவர்களின் மேம்பாட்டிற்காக அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746763
----
(வெளியீட்டு அடையாள எண்: 1746805)
வருகையாளர் எண்ணிக்கை : 278