அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தக்காளி பயிர்களை தாக்கும் வைரசை எதிர்த்து போராடுவதற்கான முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்
Posted On:
16 AUG 2021 5:15PM by PIB Chennai
டொமாட்டோ லீஃப் கர்ல் நியூ தில்லி வைரஸ் (ToLCNDV) உலகெங்கும் உள்ள தக்காளி செடிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேகமாக பரவும் இந்த நோய்க்கு எதிரான மரபணுக்கள் குறித்த தகவல்கள் கிடைக்காததால் பயிர் மேம்பாட்டின் வேகம் பாதிப்படைந்தது. ToLCNDV மற்றும் இதையொத்த வைரஸ்களை எதிர்த்து போராடும் வழிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வந்தன.
உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான தாவர மரபணுவியல் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ToLCNDV-க்கு எதிரான தக்காளி தாவர வகையின் மூலம் செயல்திறன் மிக்க யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எஸ்டபுள்யூ5ஏ-வை (ஆர் மரபணு) இது பயன்படுத்துகிறது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நவீன வளர்ப்பு மற்றும் மூலக்கூறு அணுகல்களின் வாயிலாக வைரசுக்கு எதிராக போராடும் தன்மையை தக்காளி செடி வகைகளில் உருவாக்க முடியும்.
‘புரொசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ எனும் சஞ்சிகையில் இந்த கண்டுபிடிப்பு குறித்து வெளியாகியுள்ளது (https://doi.org/10.1073/pnas.2101833118).
தக்காளி சாகுபடியை அதிகரிக்கக்கூடிய இந்த முக்கிய பணிக்காக டாக்டர் மனோஜ் பிரசாத் மற்றும் குழுவினரை உயிரி தொழில்நுட்ப துறையின் செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப் பாராட்டினார்.
2020-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிக்கும் மாண்புமிகு பிரதமரின் லட்சியத்திற்கேற்ப வேளாண் உயிரி தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை உயிரி தொழில்நுட்ப துறை எடுத்து வருவதாக டாக்டர் சுவரூப் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746403
*****************
(Release ID: 1746453)
Visitor Counter : 323