அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, விலைகுறைந்த, வாய்வழி உயிரி மருந்து : இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Posted On:
16 AUG 2021 2:28PM by PIB Chennai
உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் என்ற வெப்ப மண்டல ஒட்டுண்ணி நோய்க்கு 90 சதவீதம் சிறப்பான சிகிச்சையளிக்கும், எளிதான, விலை குறைவான, வைட்டமின் பி12, பூசப்பட்ட மிகச் சிறிய ரக வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (INST) டாக்டர் ஷ்யாம் தலைமையிலான குழு, ஒரு சிறிய ரக ஸ்மார்ட் மருந்தை கண்டுபிடித்துள்ளது. மனித உடலில் இருக்கும் இயற்கையான வைட்டமின் B12 பாதைக்கு ஏற்ற வகையில், இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது மருந்தின் நிலைத்தன்மை சவால்கள் மற்றும் மருந்து தொடர்பான நச்சுத்தன்மையைக் குறைக்கும்.
வைட்டமின் பி 12 பூசப்பட்ட திட கொழுப்பு, நானோ துகள்களின் செயல்திறன் மற்றும் பண்புகள், நச்சுத்தன்மை மற்றும் அதிகரிக்கும் நிலைத்தன்மையைத் தவிர்ப்பதில் அவற்றின் அடுத்தடுத்த சாத்தியமான மாற்றங்களை நானோ அறிவியல் தொழில்நுட்ப குழு தீவிரமாக மதிப்பீடு செய்தது.
இந்த மருந்தில் பூசப்பட்ட வைட்டமின் பி12 அத்தியாவசிய உயிர்காக்கும் நுண்ணூட்டச்சத்து என்று இந்த ஆராய்ச்சி காட்டுகிறது. இது மிகவும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல ஒட்டுண்ணி நோயுடன் தொடர்புடைய நச்சு பக்க விளைவுகளை மாற்றியமைப்பதன் மூலம், உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை மற்றும் தடுப்புக்கான, புதுமையான மற்றும் நன்மை பயக்கும் மருந்தாக செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746341
*****************
(Release ID: 1746435)
Visitor Counter : 353