வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் 2021 ஜூலை மாதத்துக்கான (அடிப்படை ஆண்டு: 2011-12) மொத்தவிலை குறியீட்டு எண்கள்
प्रविष्टि तिथि:
16 AUG 2021 12:29PM by PIB Chennai
இந்தியாவில் 2021 ஜூலை(தற்காலிகம்) மற்றும் 2021 மே மாதத்துக்கான (இறுதி) மொத்தவிலை குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-12) தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் (DPIIT) பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மொத்தவிலை குறியீடுகளின் தற்காலிக குறியீடுகள் ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி ( அல்லது அடுத்த வேலை நாளில்) இரண்டு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் தரவுகள் மூலம் இது தொகுக்கப்படுகிறது. 10 வாரங்களுக்குப்பின், இந்த குறியீடு இறுதி செய்யப்பட்டு, இறுதி குறியீட்டு எண்கள் வெளியிடப்படுகின்றன.
2020 ஜூலை (-0.25சதவீதம்) மாதத்துடன் ஒப்பிடும்போது, 2021, ஜூலை மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 11.16 சதவீதம். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள்; அடிப்படை உலோக தயாரிப்புகள், உணவு பொருட்கள், ஜவுளி, ரசாயணம் மற்றும் ரசாயண தயாரிப்புகள் ஆகியவற்றின் விலை முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, அதிகமாக உள்ளதால், 2021ம் ஆண்டு ஜூலையில் பணவீக்க விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த 3 மாதங்களில் மொத்தவிலை குறியீடுகளின் வருடாந்திர மாற்றம் மற்றும் பணவீக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746305
******
(रिलीज़ आईडी: 1746353)
आगंतुक पटल : 309