ஊரக வளர்ச்சி அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்திற்கு தயாராகிறது ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும்

Posted On: 14 AUG 2021 2:48PM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக, ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் இணைந்து, இந்த ஆண்டின் மக்கள் திட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர்கள், பஞ்சாயத்து ராஜ் துறை, தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, ஊரக மேம்பாட்டிற்கான மாநில அமைப்புடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.

கிராம வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பொதுவான தளத்தை உருவாக்கி அவற்றை கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டங்களுடன் ஒருங்கிணைக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

மாநில ஊரக வாழ்வாதாரங்கள் ஊக்குவிப்பு சங்கங்கள், ஊரக மேம்பாட்டிற்கான மாநில அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் இதர துறைகள் இணைந்து கூட்டு ஒருங்கிணைப்பு குழுவை மாநில அளவில் உருவாக்குமாறு ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அறிவுறுத்தினார். கிராம வறுமை ஒழிப்பு திட்டங்கள், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டங்களில் பிரதிபலிக்கப்பட்டுள்ள  தேவைகள் உள்ளடக்கப் படுவதை கண்காணிக்கும் முறையை இரண்டு அமைச்சகங்களும் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாக இணைச் செயலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு முடிவடைந்த பிறகு அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளில் கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் தயாரிப்பு நடைமுறைகள் குறித்து மாநில ஊரக வாழ்வாதாரங்கள் ஊக்குவிப்பு சங்கங்கள் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 14000 பேருக்கு ஆகஸ்ட் 16-18 வரை தேசிய அளவில், காணொலி வாயிலான பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745757

*****************

 


(Release ID: 1745894) Visitor Counter : 395


Read this release in: English , Urdu , Hindi