தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2021 4:00PM by PIB Chennai

மதுரை ஆதீனம் மறைவுக்கு இணையமைச்சர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக 40 ஆண்டுகளாக தொண்டாற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன்.

மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர், இவர் 1980-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பில் இருந்தவர். பல கோவில்களின் குடமுழுக்கு விழாக்களை முன்னின்று சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு. ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில் இவர் சொற்பொழிவாற்றி உள்ளார்.

மறைந்த மடாதிபதி அருணகிரிநாதர் அவர்கள் பூர்வாசிரமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். ஆன்மிக உலகின் முது பெரும் மடாதிபதி அருணகிரிநாதரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கும் ஆதீனத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

*************


(வெளியீட்டு அடையாள எண்: 1745778) வருகையாளர் எண்ணிக்கை : 155
இந்த வெளியீட்டை படிக்க: English