அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கிர், கான்க்ரேஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற நாட்டு கால்நடை வகைகளை பாதுகாப்பதற்கான ‘இண்டிகாவ்’ சிப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
Posted On:
13 AUG 2021 5:18PM by PIB Chennai
கிர், கான்க்ரேஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற தூய்மையான நாட்டு கால்நடை வகைகளை பாதுகாப்பதற்கான இந்தியாவின் முதல் ஒற்றை நியூக்ளியோடைட் பாலிமார்பிசம் (எஸ் என் பி) சிப்பான ‘இண்டிகாவ்’-வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டார்.
உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தால் உள்நாட்டிலேயே இந்த சிப் தயாரிக்கப்பட்டுள்ளது.
உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப், உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவன மூத்த விஞ்ஞானிகள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இண்டிகாவ் உலகத்தின் மிகப்பெரிய கால்நடை சிப் ஆகும் என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜிதேந்திர சிங் கூறினார். தற்சார்பு இந்தியாவுக்கான சிறப்பான உதாரணமாக இது திகழ்வதாக அவர் கூறினார்.
நமது சொந்த கால்நடை இனங்களை பாதுகாப்பதற்கான இலக்கை எட்டுவதற்கும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுவதற்கும் அரசு திட்டங்களில் இந்த சிப் பயன்படும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745479
*****************
(Release ID: 1745583)
Visitor Counter : 385