பாதுகாப்பு அமைச்சகம்
75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளார்
प्रविष्टि तिथि:
12 AUG 2021 5:56PM by PIB Chennai
‘விடுதலையின் அம்ரித் மகோத்சவம்’ என்று கொண்டாடப்படும் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாதுகாப்பு படைகளும், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு அமைப்புகளும் நடத்தி வருகின்றன.
75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 ஆகஸ்ட் 13 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கவுள்ளார்.
75 இடங்களில் தேசியக் கொடி ஏற்றுதல்: நாட்டின் 75 முக்கிய இடங்கள்/வழித்தடங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு எல்லையோர சாலைகள் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. நிறுவனத்தின் 75 குழுக்கள் தொலைதூர வழித்தடங்களுக்கு 2021 ஆகஸ்ட் 13 அன்று கிளம்புவார்கள். 19,300 கி.மீ உயரத்தில் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள வாகனத்தில் செல்லக்கூடிய உலகத்தின் மிக உயரமான
சாலையான உம்லிங்க்லா பாஸில் மூவர்ணக் கொடி ஏற்றப்படும். அடல் சுரங்கம், ரோஹ்தங், தோலா சாதியா பாலம் மற்றும் நட்பு நாடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்.
சுதந்திர ஓட்டம்: புதுதில்லியில் உள்ள கடற்படை அலுவலர்கள் உணவகத்தில் கடற்படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்பார்கள். ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0--ன் ஒரு பகுதியாக இது அமையும்.
சிலைகளை சுத்தப்படுத்துதல்: இந்திய விடுதலையில் முக்கியப் பங்காற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அஞ்சா நெஞ்சர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள 825 சிலைகளை தேசிய மாணவர் படையின் தூய்மைப்படுத்துவார்கள்.
வீரதீர விருது பெற்றவர்களுக்கான இணையதளம்: வீரதீர விருது பெற்றவர்களை கவுரவப்படுத்தி, மக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், விருது வென்றவர்கள் குறித்த தகவல் களஞ்சியம் தொடங்கப்படும். (https://www.gallantryawards.gov.in/)
வீரதீர செயல்கள் குறித்த புத்தகம்: 1972 போரில் இந்தியாவின் வெற்றியை குறிக்கும் விதமாக வீரதீர செயல்கள் குறித்த புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிடுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது போர்களில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்கள் குறித்து இப்புத்தகம் விளக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745196
-----
(रिलीज़ आईडी: 1745258)
आगंतुक पटल : 642