பாதுகாப்பு அமைச்சகம்

1971 ஆம் ஆண்டு போரின் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாக சென்றது

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2021 4:16PM by PIB Chennai

1971 ஆம் ஆண்டு போரின் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாக சென்றது.

1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், வெற்றிச் சுடர் நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தற்போது இந்த வெற்றி ஜோதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கடந்து சென்றது.

கடற்படையின் எல்சியு  ரக கப்பலில் எடுத்துச் செல்லப்படும் இந்த வெற்றி ஜோதி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நார்கண்டம் தீவு வழியாக சென்றது. அப்போது ஐஎன்எஸ் சரயு மற்றும் மற்றொரு எல்சியு ரக கப்பல்கள் உடன் சென்றன. எரியும் நிலையில் உள்ள இந்தியாவின் ஒரே எரிமலை அமைந்திருக்கும் பேரன் தீவையும் இந்த வெற்றி ஜோதி கடந்து சென்றது. எரிமலை புகையை வெளியேற்றும் பின்னணியில், வெற்றி ஜோதி கடற்படை கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த வெற்றி ஜோதி, ஹட் வளைகுடாவை சென்றடையும். அது இந்திய கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்ஹட் வளைகுடாவில் வெற்றி ஜோதியை பொதுமக்கள் பார்வையிட்ட பின், அந்த ஜோதி போர்ட் பிளேர் கொண்டுவரப்பட்டு சுதந்திர தின அணிவகுப்பின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஸ்டேடியத்தில் வைக்கப்படும்.

சுதந்திர தின கொண்டாட்டத்துக்குப்பின், வெற்றி ஜோதி, தெற்கு பகுதியில் உள்ள தீவுகளுக்கு தனது அடுத்த கட்ட பயணத்தை ஆகஸ்ட் 15ம் தேதி மாலை தொடங்கும்

 

------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1744923) வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी