வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

பழங்குடி சமுதாயங்களின் வளர்ச்சி

Posted On: 11 AUG 2021 12:59PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்

வடகிழக்குப் பகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பழங்குடியினர் துணைத் திட்டம் / பட்டியல் பழங்குடியினர் திட்டம் / பட்டியல் பழங்குடியினரின் வளர்ச்சிக்கான செயல்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் தங்களது மொத்த திட்ட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பழங்குடியினர் துணை திட்ட நிதியாக ஒதுக்குமாறு பழங்குடியினர் நலன் அமைச்சகம் மட்டுமல்லாது 40 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் நிதி ஆயோக்கால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்ப்பாசனம், சாலைகள், வீட்டுவசதி, குடிதண்ணீர், மின் மயமாக்குதல், வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் வளர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்களின் கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகையை பொருத்து மாநில அரசுகளும் பழங்குடியினர் துணை நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அசாம் அரசுக்கு கடந்த ஐந்து வருடங்களில் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட நிதியின் விவரம் வருமாறு:

வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின்  கீழ் ரூபாய் 187.21 கோடியும், என்எல்சிபிஆர் மாநில திட்டத்தின் கீழ் ரூபாய் 533.44 கோடியும், வடகிழக்கு சாலை மேம்பாட்டு திட்டத்தின் (வெளிப்புற உதவி) கீழ் ரூபாய் 484.83 கோடியும், சமூக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 2.18 கோடியும், பிடிசி, தாட்ஸி மற்றும் காட்ஸி ஆகியவற்றுக்கான சிறப்பு தொகுப்புகளின் கீழ் ரூபாய் 252.73 கோடியும், இயற்கைப் பேரிடருக்காக ரூபாய் 101.52 கோடியும், வடகிழக்கு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 40.61 கோடியும், வடகிழக்கு கவுன்சிலுக்கான திட்டங்களின் கீழ் ரூபாய் 545.11 கோடியும் என மொத்தம் ரூபாய் 2147.63 கோடி அசாம் அரசுக்கு கடந்த ஐந்து வருடங்களில் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744732

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744733

------



(Release ID: 1744882) Visitor Counter : 156


Read this release in: English , Urdu