பாதுகாப்பு அமைச்சகம்

நார்வே போர்க்கப்பலுடன், ஐஎன்எஸ் தபார் கூட்டுப் பயிற்சி

Posted On: 10 AUG 2021 5:21PM by PIB Chennai

இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் தபார், நார்வே கடற்படைக் கப்பலுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.

இந்தி கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தபார் போர்கப்பல், கடந்த 5ம் தேதி நார்வே நாட்டின் பெர்ஜென் துறைமுகம் சென்றது. அங்கு இந்திய போர்க் கப்பலுக்கு, நார்வே கடற்படை அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின் நார்வே கடற்படை தளபதி கமோடர் ட்ரான்ட் கிம்மிங்ஸ்ரட், ஐஎன்எஸ் தபார் போர்க்கப்பலில், தலைமை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய போர்க்கப்பலை வரவேற்பதில் நார்வே அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இருநாட்டு உறவுகள் மேம்பட, இதுபோன்ற சந்திப்புகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதன்பின்ஸ்டார்ம்என்ற நார்வே போர்க்கப்பலுடன் ஐஎன்எஸ் தபார் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், கூட்டாகச் செயல்பட இந்தப் பயிற்சி, பரஸ்பரம் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744466

-----



(Release ID: 1744566) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi