பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் மற்றும் தமிழகத்தில் திறன்பேசிகளை பெற்றுள்ள அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை; திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்
Posted On:
06 AUG 2021 5:21PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 1442970 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1252709.79 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 1509431.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1215425.33 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 1675018.08 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1515082.56 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ 1681376.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1730432.26 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 1579754.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 47085.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 37076.77 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 49336.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 47550.75 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 65197.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 54239.48 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ
64868.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 65280.11 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 61071.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 865577 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு இது வரை வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்காக 59488 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
போஷன் திட்டத்தின் கீழ் திறன்பேசி கொள்முதல் உள்ளிட்டவற்றுக்காக 2019-20-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதியாக ரூ 11509 லட்சமும், 2020-21-ம் ஆண்டு ரூ 871.02 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 31 வரை ரூ 19476.85 மத்திய நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி சேவைகள் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் என்கிற போதிலும், அவற்றின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு மாநிலங்களின் பொறுப்பாகும்.
எனவே, அங்கன்வாடி சேவைகள் குறித்த புகார்கள் வரும் போது, தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கு முறையான நடவடிக்கைக்காக அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து உதவிகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்காக போஷன் டிராக்கர் எனும் டிஜிட்டல் தளத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் 2021 மார்ச்சில் தொடங்கியுள்ளது.
ஒற்றை நிறுத்த மையங்கள், பெண்கள் உதவி எண்கள் (181), உஜ்வாலா இல்லங்கள், ஸ்வதார் கிரஹங்கள், குழந்தைகள் நல நிறுவனங்கள் குழந்தைகள் உதவி எண் (1098), அவசரகால எதிர்வினை ஆதரவு அமைப்பு (112) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தெருக்களில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கையை எடுக்க குழந்தைகள் நல காவல் அலுவலர்களை நியமிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குழந்தைகளின் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை நாடு முழுவதும் 645 குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை தமிழ்நாட்டில் மட்டும் எட்டு குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 10 லட்சம் நிதியுதவியை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு உதவிகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
2022 மார்ச் 31-க்குள் ஒரு வீட்டுக்கு ஒருவர் என மொத்தம் 6 கோடி வீடுகளை சென்றடைந்து ஊரக இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவை உருவாக்கும் விதத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமரின் ஜி திஷா எனும் திட்டத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
2021 ஆகஸ்ட் 2 நிலவரப்படி, சுமார் 5.01 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். 4.21 கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.59 கோடிக்கும் அதிகமான (52 சதவீதம்) பேர் இது வரை தங்களை இதில் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.
அங்கன்வாடி மையங்களின் நடவடிக்கைகள், அங்கன்வாடி பணியாளர்களின் சேவை வழங்கல், பயன்பெற்ற கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் ஆகிய அனைத்தையும் கண்காணிக்கும் விதத்தில் போஷன் டிராக்கர் செயல்பட்டு வருகிறது.
அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 865577 திறன்பேசிகள் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடில்லா இந்தியாவை உருவாக்குவதற்காக போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் முதல் 1000 நாட்களில் 18 அமைச்சகங்கள்/துறைகள் ஆற்றக்கூடிய உயர் தாக்க பங்களிப்புகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.
மாநில அளவில் சிறப்பான செயல்படுத்தலுக்காக, காலாண்டுக்கு ஒரு முறை செயல் திட்ட கூட்டத்திற்கு தலைமை செயலாளர் தலைமை வகிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்-பொது பயன்பாட்டு மென்பொருளை செயல்படுத்துதலில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தையும், திறன் வளர்த்தல், ஒருங்கிணைப்பு, நடத்தைமுறை மாற்றம் மற்றும் சமூகத்தை திரட்டுதல் ஆகியவற்றில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சிறப்பான செயல்படுத்துதலிலும் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8910790 குழந்தைகளின் வளர்ச்சி அங்கன்வாடி மையங்களின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் 2039800 பேர்.
தமிழ்நாட்டில் உள்ள 43739 அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 43214 அங்கன்வாடி மையங்களில் கழிவறை வசதிகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743242
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743211
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743234
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743236
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743239
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743244
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743247
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743252
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743268
*****************
(Release ID: 1743420)
Visitor Counter : 538