அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

முதல் எம்.கே.பான் இளம் ஆராய்ச்சியாளர் திட்டத்துக்கு தேர்வானவர்களின் முடிவுகள் அறிவிப்பு

Posted On: 05 AUG 2021 1:19PM by PIB Chennai

நிதியுதவியடன் கூடிய முதல் எம்.கே.பான் இளம் ஆராய்ச்சியாளர் திட்டத்துக்கு (MKB-YRFP) தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகளை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை இன்று அறிவித்தது.

பிரபல விஞ்ஞானி மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையின் முன்னாள் செயலாளர் எம்.கே.பான்- கவுரவிப்பதற்காக நிதியுதவியுடன் கூடிய இந்த இளம் ஆராய்ச்சியாளர் திட்டம் தொடங்கப்பட்டது.   

இதற்கு மொத்தம் 358 பேர், உயிரி தொழில்நுட்பத்துறையின் -பிராமிஸ் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இதிலிருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

35 வயதுக்கு குறைவான இளம் ஆராய்ச்சியாளர்கள்உயிர் அறிவியல்/ உயிரிதொழில்நுட்பத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளில் பி.எச்.டி படிப்புக்கு பின் இந்தியாவில் தங்கள் ஆய்வை தொடர்வதை ஊக்குவிக்கும் நோக்கில் எம்.கே.பான் இளம் ஆராய்ச்சியாளர் திட்டத்தை, உயிரி தொழில்நுட்பத்துறை ஏற்படுத்தியது

இத்திட்டம், இளம் பி.எச்.டி ஆராய்ச்சியாளர்கள், 3 ஆண்டு காலத்துக்கு சுயமான ஆராய்ச்சியை தொடர மானியம் அளிக்கிறது. இதன் மூலம் இவர்கள் தேசிய சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி, அதிநவீன ஆராய்ச்சியை மேற்கொண்டு எதிர்கால தலைவர்களாக உருவாக முடியும். இந்த ஆராய்ச்சிக்கு மாதம் ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படும். அதோடு அதிநவீன ஆராய்ச்சி மேற்கொள்ள ஆராய்ச்சி மானியமும் தாராளமாக அளிக்கப்படும். இந்த ஆராய்ச்சி உயிரிதொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி மையங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த இளம் ஆராய்ச்சியாளர் முடிவுகளை, கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

https://dbtindia.gov.in/latest-announcement/mk-bhan-young-researcher-fellowship-program-2020-21-results

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742669

 

----



(Release ID: 1742735) Visitor Counter : 228