விவசாயத்துறை அமைச்சகம்
தினை உள்ளிட்ட சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே உருவாக்குதல்
Posted On:
03 AUG 2021 6:46PM by PIB Chennai
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் - ஊட்டச்சத்து தானியங்கள் துணை திட்டத்தின் கீழ், கேழ்வரகு (ராகி), சோளம், பஜ்ரா மற்றும் தினை உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வை செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சியின் மூலம் விவசாயிகளிடையே அரசு உருவாக்கி வருகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் - ஊட்டச்சத்து தானியங்கள் திட்டத்தின் கீழ், பயிர் உற்பத்தி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், பயிர் அமைப்பு சார்ந்த செய்முறை விளக்கங்கள், புதிய வகை விதைகளின் உற்பத்தி மற்றும் விநியோகம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட வேளாண் உபகரணங்கள், நீர் சேமிப்பு கருவிகள், விவசாயிகளின் திறன் வளர்த்தலுக்கான நிகழ்ச்சிகள், விதை சிறு பெட்டிகள் விநியோகம் உள்ளிட்டவற்றுக்காக மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.
ஊட்டச்சத்து தானியங்களுக்கான விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், சிறப்புத்திறன் மையங்களை அமைத்தல், ஊட்டச்சத்து தானியங்களுக்கான விதை மையங்கள் ஆகியவற்றுக்கும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஆதரவளிக்கப்படுகின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையின் மூலம் வேளாண் பொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுவதன் காரணமாக பயனடைந்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதன் மூலம் 2018-19-ம் ஆண்டு 1,71,50,873 விவசாயிகள் பலனடைந்த நிலையில்க் 2019-20-ம் ஆண்டு 2,04,63,590 விவசாயிகளும், 2020-21-ம் ஆண்டு 2,10,07,563 விவசாயிகளும் பலனடைந்தனர்.
22 முக்கிய வேளாண் பொருட்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய அரசு அறிவிக்கிறது. பல்வேறு திட்டங்களின் மூலம் உரிய விலையை விவசாயிகளுக்கு அரசு வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741993
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741991
----
(Release ID: 1742067)
Visitor Counter : 251