பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஓஎன்ஜிசி கப்பல்கள் மூழ்குவது குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட குழு அமைப்பு


இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஓஎன்ஜிசி நடவடிக்கை

Posted On: 02 AUG 2021 5:25PM by PIB Chennai

மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு.ராமேஷ்வர் தெலி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில், டவ்-தே (Tauktae) புயல் பாதிப்பின் போது ஓஎன்ஜிசி கப்பல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 86 பணியாளர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

டவ்-தே புயலின் போது ஓஎன்ஜிசி சார்பில், பார்ஜ் பி-305 (Barge P-305 ) உள்பட அனைத்து கப்பல்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை பார்ஜ் கப்பலும் உறுதிப்படுத்தியது. கப்பலில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்புக்காக அதன் மாஸ்டர் அருகில் உள்ள இடத்தில் கப்பலை நிலை நிறுத்தியிருந்தார். இருப்பினும், கப்பலின் நங்கூரம் விலகிச் சென்றதால் கடலில் சிக்கி தத்தளித்து கப்பல் மூழ்கியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

இது தவிர, கப்பல் போக்குவரத்து பொது இயக்குநர் மற்றும் மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் செயலாளர் கொண்ட குழு கப்பல்களில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

பெட்ரோலுடன் 20 சதவிகிதம் ஏத்தனாலைக் கலக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பயோ டீசல் தயாரிப்பை ஊக்குவிக்க விண்ணப்பங்களை வெளியிட்டு வருகின்றன

பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனாலைக் கலக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு.ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். கரும்பு, சோளம் மற்றும் உணவு கழகத்திடம் கூடுதலாக உள்ள அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மூலம் எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது டீசலில் பயோ டீசலைப் கலப்பது 0.1 சதவிகிமாக உள்ளது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018-இன் படி 2030 ஆம் ஆண்டுக்குள் டீசலில் 5 சதவிகிதம் வரை பயோ டீசலைக் கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயோ டீசல் விலை உயர்வு மற்றும் அவற்றுக்கான மூலப் பொருட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் பயோ டீசல் கிடைப்பது கடந்த சில ஆண்டுகளாக குறைவாக உள்ளது.

*****************



(Release ID: 1741656) Visitor Counter : 178


Read this release in: English , Marathi