அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரியனின் புதிரான அடுக்கில், உள் சுழற்சி தோற்றம் கோட்பாட்டளவில் மாறுவது பற்றிய விளக்கம்
Posted On:
29 JUL 2021 1:01PM by PIB Chennai
சூரியனின் பூமத்திய ரேகை பகுதி, துருவ பகுதிகளை விட வேகமாக சுழல்கிறது என்பது நீண்ட காலமாக அறியப்பட்டது. இருப்பினும், ஒலி அலைகளைப் பயன்படுத்தி சூரியனின், உள் சுழற்சியைப் பார்ப்பது ஒரு புதிரான அடுக்கின் இருப்பை வெளிப்படுத்தியது, அங்கு சூரியனின் சுழற்சி தோற்றம் முற்றிலும் மாறுகிறது. இந்த அடுக்கு, மேற்பரப்புக்கு அருகில் உள்ள வெட்டு அடுக்கு (near-surface shear layer (NSSL), என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது சூரிய மேற்பரப்புக்கு மிக அருகில் உள்ளது.
இந்த அடுக்கின் விளக்கத்தை நீண்ட காலமாக ஆராய்ந்த பின்னர், இந்திய வானியலாளர்கள் அந்த அடுக்கு இருப்பதற்கு, கோட்பாடு சார்ந்த விளக்கத்தைக் முதல்முறையாக கண்டறிந்துள்ளனர். சூரிய உருவாக்கம், சூரிய சுழற்சி போன்ற பல சூரிய நிகழ்வுகளை ஆய்வு செய்ய, மேற்பரப்புக்கு அருகில் உள்ள வெட்டு அடுக்கை (NSSL), புரிந்துகொள்வது மிக முக்கியமானது, மேலும் இது மற்ற நட்சத்திரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் தன்னாட்சிஅமைப்பான ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (ARIES), ஆராய்ச்சியாளர் பிபூதி குமார் ஜா, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி அர்னாப் ராய் சவுத்திரி ஆகியோர் சூரியனில், மேற்பரப்புக்கு அருகில் உள்ள வெட்டு அடுக்கு (NSSL), இருப்பது குறித்த கோட்பாடு சார்ந்த விளக்கத்தை முதல் முறையாக கொடுத்துள்ளனர். இந்த ஆய்வு, ‘ராயல் ஆஸ்ட்ரானமிகல் சொசைட்டி’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில், இவர்கள், வெப்ப காற்று சமநிலை சமன்பாடு-ஐ பயன்படுத்தியுள்ளனர். சூரிய துருவங்களுக்கும், பூமத்திய ரேகைக்கும் இடையிலான வெப்பநிலையில் சிறிய வேறுபாடு, வெப்ப காற்று என அழைக்கப்படுகிறது, இது சூரிய சுழற்சி வேறுபாடு காரணமாக தோன்றும் மையவிலக்கு சக்தியால் எவ்வாறு சமப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.
இந்த வெளியீடுகளுக்கான இணைப்புகள்:
ArXiv: https://arxiv.org/abs/2105.14266
DOI: https://doi.org/10.1093/mnras/stab1717
மேலும் விவரங்களுக்கு: பிபூதி குமார் ஜாவை(bibhuti@aries.res.in) என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மற்றும் அர்ணாப் ராய் சவுத்திரியை (arnab[at]iisc[dot]ac[dot]in) என்ற மின்னஞ்சல் முவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740238
****
(Release ID: 1740317)
Visitor Counter : 279