விவசாயத்துறை அமைச்சகம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்புகள் உச்சி மாநாடு 2021க்கு முந்தைய உரையை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வழங்கினார்

Posted On: 28 JUL 2021 6:56PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்புகள் உச்சி மாநாடு 2021-க்கு முந்தைய தனது உரையை மெய்நிகராக வழங்கினார்.

வளரும் நாடுகளின் சமூக-பொருளாதார மாற்றங்களில் விவசாயம் முக்கியப் பங்காற்றுவதாக தனது பேச்சில் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறு, குறு விவசாயிகள் மீதான இந்திய அரசின் கவனம் பற்றி எடுத்துரைத்த அவர், விவசாயத்தை விவசாயிகளுக்கு லாபகரமாக மாற்றுவது தொடர்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவது மற்றும் ஊரகப் பகுதிகளில் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

பருவ நிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் பொறுப்பை உணர்வதாக கூறிய அவர், வேளாண்மையை நிலைக்கத்தக்க வகையில் ஈடுபடுவது குறித்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்வைத்தார்.

2030 ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை அடைய இந்தியாவின் உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திய அவர், நமது வேளாண்-உணவு அமைப்புகள் நிலைக்கத்தக்க வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டை சிறு தானிய ஆண்டாக கொண்டாட இந்தியா முன்வைத்த கோரிக்கைகளை .நா ஏற்றுக்கொண்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்,.

இந்த மூன்று நாள் உச்சி மாநாட்டில், .நா பொதுச் செயலாளர் திரு.ஆண்டோனியோ குட்ரஸ், இத்தாலி பிரதமர் திரு.மரியோ திராகி உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740012

----



(Release ID: 1740109) Visitor Counter : 203


Read this release in: English , Hindi