பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2021 ஜூன் மாதத்திற்கான உற்பத்தி அறிக்கை

Posted On: 23 JUL 2021 12:41PM by PIB Chennai

கச்சா எண்ணெய்

2021 ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2481.66 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) எனும் அளவாக இருந்தது. இலக்கைக் காட்டிலும் இது 2.26 சதவீதம் குறைவு, 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.79 சதவீதம் குறைவு ஆகும்.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மொத்தக் கச்சா எண்ணெய் உற்பத்தி 7412.87 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 2.24 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டை விட 3.42 சதவீதம் குறைவு.

இயற்கை எரிவாயு

2021 ஜூன் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2777.43 எம் எம் எஸ் சி எம் (Million Metric Standard Cubic Meters) அளவாக இருந்தது. இது மாதத்திற்கான இலக்கைவிட 5.26 சதவீதம் குறைவு. 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.05 சதவீதம் அதிகம்.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 8168.56 எம் எம் எஸ் சி எம் ஆக இருந்தது. இது இலக்கைவிட 3.52 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டைவிட 20.39 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.

பெட்ரோலிய பொருட்களின் மாதாந்திர சுத்திகரிப்பு உற்பத்தி

2021 ஜூன் மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் அளவு 18850.13 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 5.01 சதவீதம் குறைவு. 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.69 சதவீதம் அதிகம் ஆகும்.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 58970.06 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 2.89 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டை விட 15.67 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738046

                                                                                           ------


(Release ID: 1738247) Visitor Counter : 201


Read this release in: English , Hindi , Marathi