பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவுகளை ஓய்வூதியம் & ஓய்வூதியர் நலத்துறை வெளியிட்டுள்ளது

Posted On: 22 JUL 2021 7:40PM by PIB Chennai

2021 ஜூலை 14 அன்று மத்திய அமைச்சரவை எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவுகளை 2021 ஜூலை 22 அன்று ஓய்வூதியம் & ஓய்வூதியர் நலத்துறை வெளியிட்டது.

இதன் மூலம், மத்திய அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு (பாதுகாப்பு படைகள், அனைத்திந்திய சேவைகள் மற்றும் ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உட்பட) 2021 ஜூலை 1-ல் இருந்து அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரணம் 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது இது 11 சதவீதமாக இருக்கும் நிலையில், 17 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வரலாறு காணாத சூழ்நிலையின் காரணமாக, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியை 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 மூலம் உருவாகியுள்ள கூடுதல் தவணைகளை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது. 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கான அகவிலை நிவாரணம் 17 சதவீதமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737874

 

-----


(Release ID: 1737906) Visitor Counter : 390


Read this release in: English , Hindi , Punjabi