பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள்

Posted On: 20 JUL 2021 4:44PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதிலளிக்கும் போது விளக்கினார். அவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை கூடுதல் கட்டணங்கள் ஏதுமில்லாமல் ஆவணங்களை தாமதமாக சமர்ப்பிப்பதற்கான நிறுவன புதிய தொடக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2) கொவிட் இரண்டாம் அலை மற்றும் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, படிவங்களை தாமதமாக சமர்ப்பிப்பதற்கான கூடுதல் கட்டணத்தில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் சலுகைகளை அறிவித்தது. இந்த கால அளவு 2021 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) கொவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நீட்டித்தது.

4) கொவிட் தொடர்பான வாடகை சலுகையை 2021 ஜூன் 30-ல் இருந்து 2022 ஜூன் 30 வரை நீட்டிப்பதற்காக, நிறுவனங்கள் (இந்திய கணக்கு தரநிலைகள்) விதிகள், 2015 திருத்த்ப்பட்டன.

5) கட்டாயமாக கூட்டப்பட வேண்டிய நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டங்களுக்கான காலக்கெடு இரண்டு காலாண்டுகளுக்கு 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் இது மேலும் நீட்டிக்கப்பட்டது.

6) செலவு தணிக்கையாளரால் நிறுவன நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய செலவு தணிக்கை அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, கூடுதல் கட்டணத்தில் தளர்வளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737223

----


(Release ID: 1737372) Visitor Counter : 320


Read this release in: English , Telugu