பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடலோரக் காவல் படையின் தலைமையகத்தில் பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்

Posted On: 14 JUL 2021 5:46PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, புதுதில்லியில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு திரு அஜய் பட் இன்று (ஜூலை 14, 2021) நேரில் சென்றார். தீயணைப்பு, எண்ணெய் கசிவை சமாளித்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கை மற்றும் நாடுகடந்த கடல் சார் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு கே நடராஜன் மற்றும் உயரதிகாரிகள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.

பல்வேறு சவால்களுக்கு இடையேயும், குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றின் போதும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கடலோரக் காவல் படையை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவில் கடல்சார் மண்டலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பெரும் பொறுப்பை இந்திய கடலோரக் காவல் படை பெற்றுள்ளது. கடல் பகுதியில் மாறிவரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதுடன், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கிய பணியை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யாமல் சரியான உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க முடியாது”, என்று அவர் கூறினார். பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான சாகர் பற்றிப் பேசிய திரு அஜய் பட், பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல் பகுதிகள், தனித்துவம் வாய்ந்த பொருளாதார வாய்ப்புகளை நாட்டின் கட்டமைப்பிற்கு வழங்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735465

*****************



(Release ID: 1735582) Visitor Counter : 176


Read this release in: English , Urdu , Hindi