பாதுகாப்பு அமைச்சகம்

வடக்கு இமயமலைக்கு உலகின் முதல் தனிநபரின் இருசக்கர பயணம் நிறைவடைந்தது

Posted On: 07 JUL 2021 7:24PM by PIB Chennai

வடக்கு இமயமலைக்கு உலகின் முதல் தனிநபர் இருசக்கர பயணத்தை மேற்கொண்ட திருமிகு கன்ச்சன் உகுசாண்டி, 18 சவாலான சாலைகளை கடந்து தனது பயணத்தை புதுதில்லியில் உள்ள சீமா சதக் பவனில் புதனன்று (2021 ஜூலை 07) நிறைவு செய்தார். 2021 ஜூன் 11 அன்று புதுதில்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த பயணத்தை தொடங்கி வைத்தார்.

உம்லிங்க்லா பாஸை கடக்கும் முதல் பெண் இருசக்கர வாகன ஓட்டி, 18 சாலைகளையும் கடந்த முதல் பெண்மணி, புதுதில்லி-மனாலி-லே-உம்லிங்க்லா-தில்லி வரையிலான 3,187 கிலோமீட்டர் தூரத்தை கடந்த முதல் பெண்மணி ஆகிய பல்வேறு சாதனைகளை இந்த பயணத்தின் மூலம் திருமிகு கன்ச்சன் உகுசாண்டி படைத்துள்ளார்.

எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி, இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் திரு எஸ் எம் வைத்யா ஆகியோரும் இந்த பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேற்கண்ட தூரத்தை 25 நாட்களில் திருமிகு கன்ச்சன் உகுசாண்டி வெற்றிகரமாக கடந்தார். அவரது உறுதியையும், லட்சியத்தையும் எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் பாராட்டினார். எல்லையோர பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக எல்லையோர சாலைகள் அமைப்பின் பணியாளர்கள் ஆற்றி வரும் தியாகம் நிறைந்த சேவையை அவர் நினைவுக் கூர்ந்தார்.

சாலை மற்றும் கொவிட் பாதுகாப்பு விழிப்புணர்வை எல்லையோர பகுதிகளில் ஏற்படுத்துவதில் இந்த தனிநபர் இருசக்கர பயணம் பெரும்பங்காற்றியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733451

-----



(Release ID: 1733502) Visitor Counter : 256


Read this release in: English , Urdu , Hindi