சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வனஉரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் கூட்டறிக்கை ஒப்பந்தத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் கையெழுத்து
Posted On:
06 JUL 2021 7:29PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் திரு ஆர்.பி.குப்தா மற்றும் பழங்குடியின விவகாரத்துறை செயலாளர் திரு அணில் குமார் ஜா ஆகியோர் இடையே கூட்டறிக்கை ஒப்பந்தம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இடையே தில்லியில் இன்று கையெழுத்தானது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கை, 2006ம் ஆண்டு வனஉரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதையும் மற்றும் வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை பயன்படுத்துவதையும் குறிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, ‘‘பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் பருவநிலை மாற்ற முயற்சிகளில் பழங்குடியினர் மற்றும் வனப்பகுதியில் குடியிருப்பவர்களால் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்ற முடியும். இன்றைய கூட்டறிக்கை வனவாசிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை நோக்கியும், வன நிர்வாகத்தின் செயல்பாட்டில் அத்தகைய சமூகங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதாகவும் உள்ளது’’ என்றார். .
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ‘‘தகவலை பரிமாறாமல் பணியாற்றுபவர்கள், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இடையில் ஒன்றிணைவை அடைவதற்கான முன்னுதாரன மாற்றத்தை இந்த கூட்டறிக்கை குறிக்கிறது. இது மிகவும் சாதகமான வளர்ச்சி. பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாட்டில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அனுமதிக்கப்பட்ட ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733177
*****************
(Release ID: 1733197)
Visitor Counter : 345