சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் போலியான செய்திகள்: பிஎஸ்என்எல் விளக்கம்

Posted On: 06 JUL 2021 4:42PM by PIB Chennai

பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கீழ்க்காணுமாறு போலியான செய்திகளைப் பெறுகின்றனர். உங்களது சிம் ஆவணத்தை சரி பார்க்கும் பணி நிலுவையில் உள்ளது. 8xxxxxxxxx-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது சேவை 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும். நன்றி ஆர்கேஜி”.

அல்லது

அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்களது பிஎஸ்என்எல் சிம் அட்டை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உங்களது சிம் அட்டை 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும். 9xxxxxxxxx என்ற எங்களது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

இதுபோன்ற செய்திகளுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது போன்ற செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அனுப்புகிறது என்பதை நம்ப வைப்பதற்காக இந்த வகையான போலியான செய்திகள் அனுப்பப்படுகின்றன. இது போன்ற செய்திகளை புறக்கணிக்குமாறும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் சார்ந்த எந்தவிதமான கேஒய்சி தரவுகளையும் பகிர வேண்டாம் என்றும் பிஎஸ்என்எல், சென்னை தொலைபேசியின் துணை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************


(Release ID: 1733139) Visitor Counter : 228


Read this release in: English