புவி அறிவியல் அமைச்சகம்

தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted On: 28 JUN 2021 3:15PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(திங்கட்கிழமை, 2021 ஜூன் 28; வெளியீட்டு நேரம்; இந்திய நேரப்படி 13:15)

அனைத்திந்திய தாக்கம் சார்ந்த வானிலை முன்னெச்சரிக்கை தகவல்கள் (மதியம்)

28 ஜூன் (நாள் 1): அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில பகுதிகளில் அதிக முதல் மிக அதிக கனமழையுடன் சில இடங்களில் மிக பலத்த மழையும்; மேற்கு வங்கத்தில் உள்ள இமாலய பகுதி மற்றும் சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்; உத்தராகண்ட், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, பிகார், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, குஜராத் மாநிலம், மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா மற்றும் கோவா மற்றும் தெலங்கானாவில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இடி, மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை) கூடிய மழை மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், லட்சத்தீவுகள், மத்திய மகாராஷ்டிரா, வட உள் கர்நாடகா, தெலங்கானா, கடற்கரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம், கொங்கன் மற்றும் கோவா, மிசோராம் மற்றும் திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, அசாம் மற்றும் மேகாலயா, ஒடிசா, கங்கை நதி பாயும் மேற்கு வங்கப் பகுதிகள், ஜார்கண்ட், பிகார், சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டிலும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு, மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று (மணிக்கு 40-50 முதல் 60 கிலோமீட்டர் வரை) வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730881

*****************


(Release ID: 1730956) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi