புவி அறிவியல் அமைச்சகம்

பார்மர், பில்வாரா, டோல்பூர், அலிகர், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரசில் முன்னேறுகிறது தென்மேற்கு பருவக்காற்று

Posted On: 28 JUN 2021 1:41PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

(திங்கள், ஜூன் 28, 2021; வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி) இந்திய நேரப்படி காலை 8:30 மணி வரையிலான குறிப்புகளின் அடிப்படையில்

•        பார்மர், பில்வாரா, டோல்பூர், அலிகர், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் ஆகிய வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.

•        தற்போதைய வானிலை நிலவரம், வளிமண்டல சூழல் மற்றும் காற்று போக்கு முன்னறிவிப்பின் அடிப்படையில் அடுத்த 67 நாட்களில் ராஜஸ்தானின் எஞ்சிய பகுதிகள், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் பஞ்சாபில் மேம்பட்ட தென்மேற்கு பருவ மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வானிலை மாதிரிகள் தெரிவிக்கின்றன.

•        வடமேற்கு மத்திய பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிவந்த புயல் சூழல், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அருகிலுள்ள  பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது.

•        வட கர்நாடகா முதல் சௌராஷ்டிரா வரை கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.

•        வட சத்தீஸ்கர்  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிவந்த புயல் சூழல், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள  பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது.

•        கடற்கரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிவந்த புயல் சூழல், தெலங்கானா மற்றும் அருகிலுள்ள  பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1.5  முதல் 5.8 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730853

 

------


(Release ID: 1730919) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi , Punjabi