புவி அறிவியல் அமைச்சகம்
தில்லி-தலைநகர் பகுதியில் இன்று காற்றின் தரம் மிதமாக இருக்கும்
Posted On:
25 JUN 2021 2:49PM by PIB Chennai
தில்லி-தலைநகர் பகுதியில் இன்று காற்றின் தரம் மிதமாக இருக்கும் என இந்திய வானிலைத் துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லியில் காற்றின் தரம் இன்று மிதமாக இருக்கும். பலத்த காற்று, போக்குவரத்து புகை காரணமாக காற்று மாசு அளவு பிஎம் 10 என்ற அளவில் இருக்கும். காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது.
நாளையும், நாளை மறுதினமும், காற்றின் தரம் மிதமானது முதல் திருப்திகரமான பிரிவில் இருக்கும். அடுத்த 5 நாட்களுக்கு, தில்லியின் காற்றின் தரம் இதே நிலையில் இருக்க வாய்ப்புள்ளது.
தில்லி வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்று காரணமாக தில்லியில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730282
*****************
(Release ID: 1730318)
Visitor Counter : 150