சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
30.54 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள்: மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2021 9:56AM by PIB Chennai
மத்திய அரசு இதுவரை, 30.54 கோடிக்கும் அதிகமான (30,54,32,450) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
1.50 கோடிக்கும் அதிகமான (1,50,28,186) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 29,04,04,264 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 47,00,000 தடுப்பூசி டோஸ்களை, மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730208
*********************
(வெளியீட்டு அடையாள எண்: 1730272)
வருகையாளர் எண்ணிக்கை : 261