புவி அறிவியல் அமைச்சகம்
தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
Posted On:
24 JUN 2021 5:40PM by PIB Chennai
இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:
(தேதி: 2021 ஜூன் 24, வெளியீட்டு நேரம்: இந்திய நேரப்படி மாலை 4.30 மணி)
அனைத்திந்திய வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பு (மாலை)
24 ஜூன் (நாள் 1): சத்தீஸ்கரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை, கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா, ஜார்க்கண்ட், துணை இமாலய மேற்கு வங்கம், ஒடிசா அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹேவில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர்) கூடிய மழை, ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்) கூடிய மழை, ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட்-பல்திஸ்தான், முசாபர்பாத், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர்) கூடிய மழை, கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா அருணாச்சலப் பிரதேசம், அசாம் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெலங்கானா ராயலசீமா, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறைக்காற்றுடன் கூடிய மழை மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான பலத்த காற்று தென்மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரேபிய கடல், குஜராத் கடற்கரை பகுதி, மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் ஆந்திரப்பிரதேச கடலோர பகுதிகளில் வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730076
-----
(Release ID: 1730106)
Visitor Counter : 177